ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல், ஜூலை 12ம் தேதி வரை, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுகள் நடைபெறும். தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இதே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 13ம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும். உரிய தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு, இதே மையங்களில், "ஹால் டிக்கெட்'டுகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment