PAGEVIEWERS

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை   . ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment