தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1314 / கே3 / 2012, நாள். 30. 5.2012
அனைத்து ஊராட்சி
ஒன்றிய, நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ /
மாணவியர்களுக்கென பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
னைத்து
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், அனைத்து உதவி தொடக்கக் கல்வி
அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
இத்திட்டங்கள் பற்றிய விபரங்களை பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும்
பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் "அறிவிப்பு பலகை" அமைத்து
அதில் அறிவிப்பு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment