PAGEVIEWERS

கூட்டணி கட்சியின் எதிர்ப்பால் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா(PFRDA BILL) நிறைவேற்றாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திரிணாமூல் காங்கிரசின் பலத்த எதிர்ப்பால் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற இருந்த புதிய ஓய்வூதிய மசோதா எந்தவித முடிவுக்கு வராமல் ஒத்திக்கவைக்கப்பட்டது.
இந்த மசோதா குறித்து இன்னும் தெளிவான விவாதம் வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக அதன் உறுப்பினர் மற்றும் ரயில்வே அமைச்சரான  முகுல் ராய் கடிதம் ஒன்றை நேற்று பிரதம மந்திரி மற்றும் நிதி அமைச்சர் இருவருக்கும் விரிவான கடிதம் எழுதினார்.
இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் மூன்றாவது விவாதமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட இருந்தது. பின்னர், பில் ஒத்திவைக்கும்  முடிவு நேற்றிரவு எடுக்கப்பட்டது. பில் இன்று மூன்றாவதாக அமைச்சரவை கூட்டத்தில் வந்தபோது, அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் அது "கைவிடப்பட்டது" என்று கூறி அடுத்த விவாதத்திற்கு சென்றார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து இந்த மசோதா குறித்த முடிவு கைவிடப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் ரயில்வே அமைச்சரான  முகுல் ராய் PFRDA BILL குறித்து எந்தவித கருத்து கூறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment