PAGEVIEWERS


ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியதாவது: ஆறாவது சம்பள கமிஷன் அளித்த பரிந்துரைகள், 2006 ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என, ஒரு சிலரிடமிருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.முந்தைய நடைமுறைகளின்படி, இரண்டு சம்பள கமிஷன்களுக்கு இடையே, குறைந்தது, 10 ஆண்டுகள் இடைவெளி இருந்துள்ளது. எனவே, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் எதுவும், இப்போது அரசிடமில்லை.இவ்வாறு, நமோ நாராயண் மீனா கூறினார்.

No comments:

Post a Comment