PAGEVIEWERS

 பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள என்றும், இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ப.மோகன் கூறியுள்ளார்.
.
முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் நலனில்அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

சட்டசபையில் தமது துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களை பதில் அளித்து அவர் கூறியதாவது: பெண்கள் முன்னேற்றத்திற்கு, கல்வி அறிவும்; பொருளாதார நிலையில் உயர்வும் முக்கியமானவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதைத் துறையின் மூலம், தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் பயன்பெறும் 1000 பேரில் 50 விழுக்காடு பயனாளிகள் பெண்களாக இருக்க வேண்டும் என  முதல்வர் அம்மா , குறிப்பாக ஆணையிட்டுள்ளார்கள் என்பதையும், நடப்பாண்டு (201314) வரவுசெலவு திட்டத்தில் இதற்கென ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதோடு, இதில் 50 விழுக்காடு தொகை மகளிர் தொழில் முனைவோருக்காக தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்தும் வகையில் முதலமைச்சர் அம்மா  வழங்கப்பட்ட “தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 15 இலட்சம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் ஆண்டிலேயே (20122013) 3,12,263 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு தொழில்கள் தொடங்க திறமையும், ஆர்வமும் உள்ள, புதிதாக தொழில் துவங்க முன்வருவோருக்கு பல்வேறு துறைகளில் இருந்து உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைந்து பெற்றுத்தரும் நோக்குடன் “மாவட்ட தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு ஆலோசனை குழுஎன்ற அமைப்பை அமைத்து 27.12.2012 அன்று அரசணை வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய முறைப்படி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மூலமாக தொழில் முனைவோர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment