PAGEVIEWERS


INTERIM ORDER WILL BE UPDATED SHORTLY IN OUR WEBSITE...

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை

என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது
.
இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வுகிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவி உயர்வுகலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவி உயர்வுவாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.....

No comments:

Post a Comment