PAGEVIEWERS







மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 72 சதவீதத்துடன், 8 சதவீதம் உயர்த்தி, 80 சதவீதமாக வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதி முதல், கணக்கிட்டு வழங்கப்படும். இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில், 10 ஆயிரத்து, 67 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இந்த உயர்வின் மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வு, 50 சதவீதத்தை தாண்டும்போது, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக, ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். இவற்றுடன், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எச்.எம்.டி., நிறுவனத்தை புனரமைக்க, 1,083 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்ய பட்டது. மேலும், பீகார் மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை திட்டத்திற்கு, 12ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்தது.

No comments:

Post a Comment