PAGEVIEWERS


கூட்டுறவு தேர்தலில் பரபரப்பு 568ல் 410 ஓட்டுகள் செல்லாதவை




கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. 11 இடங்களுக்கு மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 568 வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அப்போது, அதிக அளவில் செல்லாத வாக்குகளாகவே வந்ததால், வேட்பாளர்கள் ஆத்திரமடைந்து வாக்கு எண்ணும் இடத்திலிருந்து வெளியேறினர். மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரினர். 


சங்கரன்கோவில் டிஎஸ்பி புகழேந்தி, கோவில் பட்டி துணை பதிவாளர் சிவகாமி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் வேட்பாளர்களிடம், விதிமுறைப்படிதான் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் தான் விவரம் தெரியாமல் தவறுதலாக வாக்குப் பதிவு செய்துள்ளீர்கள். எனவே மறுதேர்தல் நடத்த முடியாது என சமாதானப்படுத்தினர். 2 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு 8 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டது. இதில் பதிவான 568 வாக்குகளில் 410 செல் லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந் தனர். இதன்படி அதிமுக 4, மதிமுக 4, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் திடீர் விலகல்

ஈரோடு அருகே கூட்டுறவு பால் விற்பனையாளர் சங்கத் தேர்தல் மனுதாக்கலின்போது சங்க உறுப்பினர்களை நேற்று முன்தினம் அதிமுகவினர் அடித்து விரட்டினர். இந்நிலையில் 120 உறுப்பினர்கள் சங்கத்திலிருந்து விலகினர். இவர்கள் தனியாக பால் பண்ணை அமைத்து விற்பனை செய்யத் துவங்கினர். இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இதனால் சங்கத்தை கலைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment