PAGEVIEWERS


மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அல்லது 24.04.2013 அன்றா? ஆசிரியர்கள் குழப்பம்

Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2013 – Orders issued. - GO.981 PUBLIC DEPT DATED.19.11.2012 CLICK HERE...

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் அதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்களுக்கு 23.04.2013 அன்று விடுமுறை என்றும் ஒரு சில ஆசிரியர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் தமிழக அரசு 24.04.2013 புதன்கிழமை
விடுமுறையாக அறிவித்துள்ள பட்சத்தில் 23.04.2013 அன்று மத்திய அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்றும், நாட்காட்டியிலும் 23.04.2013 அன்று மகாவீர் ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆகையால் 23.04.2013 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும்,  ஆகையால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் 23.04.2013 அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று கருத்துகள் பரவலாக வருகின்றன. எனவே இதுகுறித்து ஆசிரியர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் 24.04.2013 அன்று தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியலின் படி கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பட்சத்தில் முறையான அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விடுமுறை குறித்து எவ்வித குழப்பம் அடைய தேவையில்லை என்று கேட்டுகொள்கிறோம். தொடக்கக் கல்வி துறையின் கீழ் திருச்சி, மதுரை, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 24.04.2013 புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் உங்களின் பார்வைக்காக மேலே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment