PAGEVIEWERS

ஜனவரி 1 முதல் அமலாகிறது எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் சில ஸ்டேஷன்கள் ரத்து.


 ஜனவரி 1ம் தேதி முதல் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் நிற்காது என்று எனத் தெரிகிறது.தொலை தூர விரைவு ரயில்களில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன்படி, தற்போது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் கடந்த 4 தினங்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு
வரும் ரயில்களில் பொங்கலுக்கு முந்திய 3 தினங்களுக்கான பெரும்பாலான டிக்கட்டுகள் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருகிறது.இந்நிலையில் சில ரயில்களில் குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய முற்பட்ட நிலையில் அந்த ஊர்களின் பெயர்கள் ஜனவரி 1ம் தேதியில் இருந்தே கம்ப்யூட்டரில் இருந்து அகற்றப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, நெல்லை எக்ஸ்பிரஸ் சாத்தூரிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி, திண்டிவனத்திலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நெய்யாற்றின்கரை, பாறசாலை, வள்ளியூர், கடம்பூர், திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகத்திலும், செந் தூர் எக்ஸ்பிரஸ் சீர்காரூ., திருபாதபுலியூரிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களிலும் ஜனவரி 1ம் தேதி முதல் நிற்காது என தெரிகிறது. இந்த குறிப்பிட்ட நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட ரயில்களில் வெளியூர் செல்ல முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 1ம் தேதிக்கு மேல் கணிணியில் இடம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.ஜனவரி 1ம் தேதி முதல் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தவும் சில குறிப்பிட்ட ரயில்களில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் வரை குறைக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் முறையாக வெளியிட வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment