:ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று (24.09.2012) தொடங்கியது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாக தகுதிதேர்வு எழுத வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற¢றனர். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதற்காக அக்டோபர் 3ம் தேதி மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தகுதி தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து புதியவர்களுக்கு ம¦ண்டும் வாய்ப்பு அளிப்பதாக கூறிய ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
புதியவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோக¤க்கப்படுகின்றன. வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க 28ம் தேதி கடைசி நாளாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment