ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7
சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் உயர்ந்து விட்டதால் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் இனி 72 சதவீதத்தை அகவிலைப்படியாக பெறுவார்கள். இந்த உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment