டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது |
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.வருகிற 27 ந் தேதி டிஎன்பிஎஸ்சி க்கு புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.புதிய கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகளை கடிமையாக அமல் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குரூப் 2 வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகிறது. போலி வினாத் தாள்களைப் பயன்படுத்தியவர்கள் மீது தடை விதிப்பது குறித்து புதிய கட்டிட திறப்பு விழாவிற்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என். பி.எஸ்.சி. குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத் தேர்வில், ஈரோடு மற்றும் தருமபுரியில் வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக குரூப் 2 தேர்வு எழுதிய தனக்கொடி, அவரது கணவர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுதாகர், வரதராஜ், ஜெய்நிவாஸ், சதீஷ் குமார், மோகன்பாபு, செல்வராஜ், தியாகராஜன், செந்தில்குமார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட பாலன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
"குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிப்பார்கள். சனிக்கிழமை இரவு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனி அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.
மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறிப்புகள் கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும். இதுவரை கைதான அனைவரிடமும் மீண்டும் விசாரிக்கப்படும்' என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாணையப் பணியாளர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிற
No comments:
Post a Comment