டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார். கடந்த மாதம் குரூப் -2 தேர்வுகள் நடந்தன. இதில் கேள்வித்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது .இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேள்வித்தாள் அவுட்டானதை தடு்க்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்ளையில் நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தேர்வு மையங்களில் தான் கேள்வித்தாள்களை ஆன்லைனின் பதிவிறக்கம் செய்யமுடியும். இதன் மூலம் இனி முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment