PAGEVIEWERS


மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள்



ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய் பணி, இந்திய பொறியியல் பணி, இந்திய வனப் பணி, இந்திய பொருளாதாரப் பணி முதலான பல மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய தேர்வாணயம் நடத்துகிறது. அதே போல, மாநில அரசில் சில பணிகளுக்கான தேர்வுகளை மாநில தேர்வாணையம் நடத்துகிறது. பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு, குறித்து சில விவரங்கள் இதோ...

சிவில் சர்வீஸ் தேர்வுகள்: (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி) :
அறிவிப்பு: டிசம்பர் இறுதி வாரம்.
தேர்வு: மே 2-வது வாரத்தில் முதல்நிலைத் தேர்வு.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.
வயது வரம்பு: 21 - 30 வயது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்சரவரம்பு சலுகை அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் 21 வயது முதல் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.

பொதுப் பிரிவினர் 4 முறையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7 முறையும் தேர்வு எழுதலாம். தாழ்த்தப்பட்ட பழங்குடியன வகுப்பினருக்கு வரம்பில்லை.

இந்திய பொறியியல் பணி  :
அறிவிப்பு: ஜனவரி.
தேர்வு: ஜூன். மூன்று தினங்கள் தேர்வு நடைபெறும்.
கல்வித் தகுதி: பி.இ. ஆனால் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.

இந்திய வனப் பணி :
அறிவிப்பு: பிப்ரவரி.
தேர்வு: ஜூலை.
கல்வித் தகுதி: வனவியல், அறிவியல் பாடங்கள், புவியியல், கால்நடை அறிவியல், கணிதம், வேளாண்மை, பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியப் பொருளாதாரப் பணி :
அறிவிப்பு: ஜூன்.
தேர்வு: டிசம்பர்.
கல்வித் தகுதி: பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி :
அறிவிப்பு: செப்டம்பர்.
தேர்வு: பிப்ரவரி.
வயது வரம்பு: 19 - 25.
கல்வித் தகுதி: பி.எஸ்சி. பட்டம்.

ஒருங்கிணைந்த மருத்துவப் பணி :
அறிவிப்பு: செப்டம்பர்;
தேர்வு: ஜனவரி;
வயது வரம்பு: 21 - 32.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உதவி கமாண்டண்ட் பணி :
அறிவிப்பு: நவம்பர்.
தேர்வு: டிசம்பர்.
வயது வரம்பு: 20 - 25; கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

மத்திய போலீஸ் படையில் உதவி கமாண்டண்ட் பணி :
அறிவிப்பு: தேவைக்கு ஏற்றவாறு அறிவிப்பு வெளியாகும்.
தேர்வு: அறிவிப்பு வெளியான 3 மாதத்தில் தேர்வு.
வயது வரம்பு: 20 - 25.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்தும்.

குரூப்-1: துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை அதிகாரி, துணைபதிவாளர் ஆகிய பணியிடங்கள் :
அறிவிப்பு: நவம்பர் அல்லது டிசம்பர்;
தேர்வு: ஏப்ரல்.
வயது வரம்பு: 21 - 30. தாற்காலிகமாக பொதுப் பிரிவினர் 35 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்டோர் 40 வயது வரையும் எழுதலாம்.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

குரூப்-2: சார் பதிவாளர், உதவிப் பிரிவு அதிகாரி, உதவிவணிக வரித்துறை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், வருவாய் துறை ஆய்வாளர், தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் :
அறிவிப்பு: காலிப் பணியிடங்களைப் பொருத்து அறிவிப்பு.
தேர்வு: அறிவிப்பு வெளியான 3 மாதத்தில் தேர்வு.
வயது வரம்பு: 21 - 30. பொதுப் பிரிவினர் 35 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்டோர் 40 வயது வரையும் தேர்வு எழுதலாம்.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

குரூப்-4: இந்தத் தேர்வின் மூலம் ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, வி.ஏ.ஓ. உள்ளிட்ட பதவிகளுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
வயது வரம்பு: 21 - 30. பொதுப் பிரிவினர் 35 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்டோர் 40 வயது வரையும் தேர்வு எழுதலாம்.
குறைந்த பட்சப் படிப்பு 10-ம் வகுப்பு.
எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கும்.

No comments:

Post a Comment