Direct Recruitment of Post Graduate Assistants for the year 2010- 11
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு இன்று முதல் குறைப்பு
இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினை 10ல் இருந்து ஒரு பங்காக குறைக்க மத்திய தொலைத் தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
அதேப்போல, செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கும், செல்பேசியின் கதிர்வீச்சு அளவைக் குறைக்க வழிகாட்டு நெறிமுறை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் செல்பேசி டவர்கள் குறைந்தது 35 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில்ம சுமார் 7 லட்சம் டவர்கள் அப்புறப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், செல்பேசி பயன்படுத்துபவர்களுக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, செல்பேசியில் ஹெட் செட், ப்ளூ டூத் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது என்றும், உடலில் இருந்து செல்பேசியை தொலைவில் வைப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொலைபேசியில் அதிக நேரம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எஸ்எம்எஸ்களை அனுப்புவதை அதிகரித்துக் கொண்டால், செல்பேசி கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு சிட்டுக் குருவி இனமே அழிந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது கதிர்வீச்சின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment