சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
72 சதமாக உயரும் :
அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயர்கிறது. இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.
அதிக எதிர்பார்ப்பில் ஊழியர்கள்:
இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனராம்.
No comments:
Post a Comment