PAGEVIEWERS


குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, ஜூலை 7ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 10.2 லட்சம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய சிலருக்கு, 200 கேள்விகளுக்குப் பதில், 150 கேள்விகள் மட்டுமே, கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, ஐகோர்ட்டில், சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "மறு உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, உத்தரவிட்டது. விடைத்தாளை திருத்திக் கொள்ள, அனுமதித்தது. ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைமதி, "குறைபாடு உடைய, கேள்வித்தாளை வழங்கியதால், பாதிக்கப்பட்ட, 13 பேருக்கு, புதிதாக தேர்வு நடத்தப்பட்டது. அதில், மனுதாரர்களுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது' என்றார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு, "தேர்வு நடத்தப்பட்டு விட்டதால், எங்களுக்கு மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார். இதையடுத்து, "குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிடக் கூடாது' என, ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்த உத்தரவை நீக்கி, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment