PAGEVIEWERS

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறைக்கு மின்சார வாரியம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மின் திட்டங்களை செயல்படுத்த 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சில ஆண்டுகளாக மின்வெட்டு இருந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்து தினசரி 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. தினசரி மின்சாரம் இருக்கின்ற நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரமே அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால்
விலைவாசியும் மறைமுகமாக உயர்ந்து வருகிறது. மின் உற்பத்தி குறைவு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதில் சிக்கல்கள் என்று பல்வேறு காரணங்களை மின்வாரியம் கூறுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
அதில் நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஏற்படும் சிரமங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப் பால் தடைபட்டு வரும் மின் திட்டங்கள் உட்பட மின் உற்பத்திக்கு தடையாக இருப்பதாக பல்வேறு காரணங்களை பட்டியல் இட்டுள்ளனர்.
அதன் விவரம்:
*நீர், எரிபொருள், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வரூ.த்தட இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிரமங்கள்.
*மின் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு.
*ஒடிசா மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து நிலக்கரியை எடுத்து வருவதில் ஏற்படும் சவால்கள்.
*மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஏற்படும் தாமதம்.
*கட்டுமான பணிகளில் ஏற்படும் தாமதம். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதிலும், விநியோகி ப்பதிலும் ஏற்படும் சிக்கல்கள்.
*மொத்தத்தில் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்வதற்கு 2 ஆண்டுகளும், திட்டங்களை உருவாக்க 5 ஆண்டுகளும் என்று மொத்தம் 7 ஆண்டுகள் தேவைப்படுகிறது .
*பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் .
*மலிவான விலையில் தரமான, தடையில்லா மின்சாரம் வழங்குவதே எங்கள் லட்சியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியம் திடீரென இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளது பொது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

No comments:

Post a Comment