: கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர் நியமனத்தில் ஊழல் நடக்கிறது. சத்துணவு திட்டத்தின்கீழ் 28,596 பணியாளர்களை நியமிக்க அதிமுக மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் யி2 லட்சம் முதல் யி3 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்கினர். இந்த நியமனம் செல்லாது என்று மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் கழிவான மொலாசஸை, ஏலம் விட்டதில் யி26 கோடி ஊழல் நடந்துள் ளது. இந்த ஏலத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 18 மணி நேரம் மின்வெட் டால் விவசாயம்
, சிறு, குறு தொழில்கள், பஞ்சாலைகள் முடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று, அனைத்து தொழிலாளர்களுக்கும் யி10 ஆயிரம் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொச்சியில் இருந்து பெங்களூருக்கு விளை நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை கை விட வேண்டும். கிரானைட் ஊழல் விசாரணை யை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். பாமக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், முதலியார், நாயுடு, யாதவர், நாடார் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து போட்டியிடும். முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி, டிசம்பர் 17ம் தேதி மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:
Post a Comment