அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் தினம் 1 மணி நேரம் ஆய்வு செய்தால் 6 மாதத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்
அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் தங்களது துறை சம்பந்தமாக தினமும் 1 மணி நேரம் ஆய்வு செய்தால் 6 மாதத்தில் மாற்றம் ஏற்படும் என்று கோவையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை துவக்கி வைத்து கிரண்பேடி கூறினார்.
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி கூடம் துவக்க விழா ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா மற்றும் வி.எல்.பி. கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்ளாள் ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் கிரண்பேடி, ஸ்ரீகிருஷ்ணா ஐஏஎஸ் பயிற்சி கூடத்தை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்து பேசுகையில் கூறியதாவது: இந்திய ஆட்சி பணி என்பது நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது. முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டையே பாதிக்கும். சிலவற்றில் சிறப்பாக உள்ளது. சிலவற்றில் ஊனமாக இருக்கிறது. இந்திய ஆட்சி பணி என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் இடையே எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது. அரசு ஒதுக்கீடுகளில் ஒவ்வொன்றிலும் அர்த்தம் உள்ளது. அதன் கோப்புகளில் அரசின் கொள்கை அடங்கி உள்ளது.
சிவில் சர்வீஸ் பணி என்பது பாதுகாப்பானது. நேர்மையாக இருக்கும் போது யாராலும் தூக்கமுடியாது. இந்த பணி இந்திய நாட்டிற்காக, ஏழை மக்களுக்காக, சமுதாயத்திற்காக சேவை செய்யும் பணியாகும். சரியான கார்ப்பரேட் தொழிலும் இந்த பணியை செயல்படுத்த முடியும். அரசின் செயலாளர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கும் வீட்டுக்கும் செல்வதை தவிர்த்து தினமும் ஒரு மணி நேரம் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட பணியை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணியை செய்தால் 6 மாதங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வலுவான லோக்பால் மசோதாவை ஆளும் கட்சியால் தான் கொண்டு வரமுடியும். எதிர்கட்சிகளால் இவற்றினை நிறைவேற்ற முடியாது. தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமல்படுத்தமுடியவில்லை.
இங்குள்ள இரு பிரதான கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா என்ற விசாரணை அமைப்பு இருக்க வேண்டும். ஊழல், லஞ்சம் வாங்குபவர்களை இதன் மூலம் தண்டிக்க முடியும். இந்திய ஊழலுக்கு எதிரான இயக்கம் தற்போது இரண்டாக பிரிந்து விட்டது. மக்கள் இயக்கமாகவும், அரசியல் இயக்கமாகவும் உள்ளது. அரசியல் இயக்கமானால் அவர்கள் கட்சி பெயரை அறிவிக்க வேண்டியது தானே? வரும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாதிகளால் வாக்குகளை வாங்க முடியாத அளவுக்கு மக்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். காசு இருந்தால் எதையும் வாங்க முடியும் என்பதை மாற்றி காட்ட வேண்டும். இவ்வாறு கிரண்பேடி பேசினார்.
முன்னதாக கல்வி குழுமத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை கல்லூரி உதவி பேராசிரியை சுனிதா அறிமுகம் செய்த வைத்தார். விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தரராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி,ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்ப கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 100 மாணவ , மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தை சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிக்கப்படுகிறது

No comments:
Post a Comment