PAGEVIEWERS

சட்டப் படிப்பில் சேர்வது எப்படி?-

சமூகத்தில் ஒரு சக்தி வாய்ந்த படிப்பாக திகழும் சட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகளை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொண்டால் நன்மை பயக்கும்.
படிப்புகள்
சட்ட இளநிலைப் படிப்பு(LL.B) என்பது இன்னும் பிரபலமாக இருக்கும் ஒரு படிப்பு. ஒருங்கிணைந்த B.A. LL.B, B.Sc. LL.B, BBA. LL.B and B.Com. LL.B படிப்புகளும் பிரபலமானவை. மேலும், சட்ட முதுநிலைப் படிப்பையும்(LL.M) மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.

வணிக சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற, Master of Business Law என்ற படிப்பை மேற்கொள்ளலாம். மேலும், MBL - LLM மற்றும் MBA - LLM போன்ற ஒருங்கிணைந்த படிப்புகளும் உள்ளன.
தகுதிகள்
LL.B படிப்பில் சேர, ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பை 40% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்(SC/ST மாணவர்களுக்கு 35% போதுமானது). மேலும், நுழைவுத் தேர்வையும் வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும்.
அதேசமயம், ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர வேண்டுமெனில், பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.  சட்டத் துறையில் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், நீங்கள் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சேர்க்கை
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரிகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் மூலமே, பெரும்பாலான பல்கலைகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், LL.B மற்றும் LL.M ஆகிய படிப்புகளுக்கு, CLAT(Common Law Admission Test) தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.
அதேசமயம், டெல்லி தேசிய சட்டப் பல்கலை, ஒரிசா சட்டப் பல்கலை மற்றும் பிற தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், தாங்களே நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.

No comments:

Post a Comment