PAGEVIEWERS


 அமெரிக்க பத்திரிகை போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலி்ல், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளார்.

கொள்கைகளை வகுத்தல், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், சேவை நோக்குடன் செயல்படும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி வாகை சூடியுள்ள பெண்களை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலின் முதலிடத்தில் ஜெர்மன் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்‌கெலும், இரண்டாமிடத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மூன்றாம் இடத்தில் பிரேசில் அதிபர் டில்மா ரெளசூப்பும் உள்ளனர். கடந்தாண்டும், முதல் மூன்று இடங்களை இவர்களே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



சோனியா 6


கடந்தாண்டு பட்டியலில் 7ம் இடத்திலிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, இந்தாண்டு பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, 7ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நூயி பின்னடைவு


கடந்தாண்டு பட்டியலில் 4ம் இடத்தில் இருந்த அமெரிக்கவாழ் இந்தியரான இந்திரா நூயி, இந்தாண்டு பட்‌டியலில் 12ம் இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 
பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்


மெலிண்டா கேட்ஸ் 4ம் இடத்திலும், சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டின் லகார்டு 8ம் இடத்திலும், இசைக்கலைஞர் லேடி காகா 14ம் இடத்திலும், மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூயி 19ம் இடத்திலும், இரண்டாம் எலிசபெத் 26ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் 27ம் இடத்திலும், ‌தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா 30வது இடத்திலும், ஹாரி பார்ட்டர் நாவலாசிரியர் ஜே கே ரவுலிங் 78வது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment