PAGEVIEWERS


 அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 கோடி காலி பணியிடங்கள் 
விரைவில் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னையில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, அரசு அலுவலகங்களில் தற்போதைய அளவில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேர்வுகள் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. நாட்டின் கிராமப்புறப்பகுதிகளில் உள்ள திறமையானவர்களும் அரசுப்பணிகளில் அமரும் வண்ணம், அந்தந்த மண்டல மொழிகள் என மூன்று மொழிகளில் வினாத்தாள்களை தயாரிக்க நடவடிக்‌கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்குள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) மூலம், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment