தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய
நல்லாசிரியர்
விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள்
ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆண்டுதோறும்,
ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும்
ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள்,
நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன. கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர்
விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி
கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட
உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.
No comments:
Post a Comment