PAGEVIEWERS

ஈரோடு: கேள்வித்தாள் வெளியானதையடுத்து டி.என்.பி.எஸ்.சி.,குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

. இநத கேள்வித்தாள் எப்படி வெளியானது என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும் பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதில் பல்வேறு திடுக் தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் குரூப் -2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 6 . 4 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நேற்று தேர்வு நடந்தபோது ஈரோட்டில் மாணவி தனக்கொடி ஒருவர் வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தேர்வு
கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். தேர்வு முடிந்ததும், வெளியே வந்தவர்கள், தனக்கொடியை கண்புபிடித்தனர். அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். உண்மையிலேயே கேள்வித்தாள் லீக்கானதா என விசாரிக்கப்பட்டது. இது போன்று கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லீக்கானது கண்டுபிடிக்கப்பட்டது .

இது தொடர்பாக இன்று ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் தனக்கொடியிடம் டி.ஆர்.ஓ., கணேசன், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர், இதில் தனக்கொடி தனது கணவன் செந்தில் மூலம் கிடைத்ததாக தெரிவித்தார். செந்திலை விசாரித்த போது , நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த சுதாகர்மூலம் கிடைத்ததாக தெரிவித்தார்.சுதாகர் இப்போது ஈரோட்டை சேர்ந்த வரதராஜன் என்பவைர கை காட்டியுள்ளார். தொடர்ந்து இது சங்கிலி தொடர் போல போய்க்கொண்டிருப்பதால் உண்மை குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மெயில் மூலம் வினாத்தாள்: கேள்வித்தாள் பரிமாற்றம் மெயில் மூலமாகவே வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை , திருச்சி மற்றும் நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மெயில் பரிமாற்றம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் பிடிபட்டவர்களிடம் அவர்களது மெயில் ஐ.டி.,யை ஓப்பன் செய்ய போலீசார் கூறியபோது அவர்கள் தங்களின் பாஸ்வேர்டு மறந்து விட்டதாகவும்,மெயிலை திறக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நட்ராஜ் பேட்டி: முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தேர்வு ரத்து செய்யப்படுவது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நட்ராஜ் கூறியதாவது, வினாத்தாள் தயாரிப்பு பணி போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் லீக் ஆகி இருப்பது வேதனை தருகிறது. மக்கள் மற்றும் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். விரைவில் புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, குழு அமைக்கப்பட உள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, அதை தேர்வுமையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment