பிளஸ் 2 வுக்கு பின் என்ன படிக்கலாம்...? எங்கு படிக்கலாம்...? என்ற
மாணவ , மாணவிகளின் கேள்விக்கு கல்வி நிபுணர்கள் பதில் அளிக்கும் நேரடி
ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தினமலர் இணையதளத்தின் மூலம் மாணவ, மாணவிகள்
தங்களுடைய சந்தேகங்களுக்கு விடை பெற்றனர். கை நிறைய சம்பாதிக்க என்ன வழி ? ,
கலை, அறிவியல் படிப்புகள் மற்றும் சட்டப்படிப்புகள்,மருத்துவம் - அறிவியல்
படிப்பு தொடர்பான ஆலோசனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி ஜூலை 12ம் தேதி அன்று வங்கியில் கல்விக் கடன் பெறும் வழிமுறைகள்
குறித்து வங்கி அதிகாரி விருத்தாசலம் விளக்கமளித்தார். தினமலர் டி.வி,
நடத்தி வரும் இந்நிகழ்ச்சி மாணவ, மாணவிகளுக்கு பெரும் துணையாக இருந்தது என
பலரும் தங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர். இன்னும் வரும் காலத்தில்
பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சி நடத்த தினமலர் திட்டமிட்டுள்ளது என்பதை
வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
வீடியோ தொகுப்புகள்
No comments:
Post a Comment