சென்னை: டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை
வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.
சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், தனது வினாத் தாளில் 200க்கு 195
கேள்விகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் தனது அரசு வேலை உரிமை
பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து வழக்கு
தொடர்பாக விளக்கம் கேட்டு டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment