தினமலர் சார்பில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம், நாளை(ஆக.,18) காலை 10 முதல் மதியம் ஒரு மணிவரை, மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நடக்க உள்ளது.
ஜூலை 9ல் வி.ஏ.ஓ., தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 1870
காலிப்பணியிடங்களுக்கு, இதுவரை பத்தரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு பதவிக்கு 550 பேர் வரை
விண்ணப்பித்துள்ளனர். செப்., 30ல் தேர்வு நடக்க
உள்ளது.
பொதுஅறிவில் 100 வினா, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100
வினாக்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
பொதுஅறிவில் வெற்றி பெறுவதற்கான "டிப்ஸ்களை", மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட்
ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் வழங்குகிறார்.
பொதுத்தமிழ் பாடம் குறித்து, மதுரை செந்தமிழ்க் கல்லூரி உதவி
பேராசிரியர் ராஜ்மோகன் விளக்கம் அளிக்கிறார். இந்த தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாது, பிற போட்டித் தேர்வுகள் எழுத
விரும்புபவர்களும் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment