செவ்வாய் கிரகத்திலிருந்து புதிய படங்களை அனுப்பியது கியூரியாசிட்டி விண்கலம்
NASAs Mars rover sends back stunnin...
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு நாசா ஆய்வு மையம் அனுப்பி வைத்திருக்கும் கியூரியாசிட்டி விண்கலமானது புதிய புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறது.
இப்புதிய புகைப்படத்தில் அங்குள்ள சிகரத்தின் படம் இடம்பெற்றுள்ளது. இதேபோல் பாறை ஒன்றையும் விண்கலம் படம்பிடித்திருக்கிறது. நாசா அனுப்பியிருக்கும் மவுண்ட் சார்ப் என்ற இந்த சிகரம் முழுவதும் மண்குவியல்களால் ஆனது.
இந்த மண்குவியல்களை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் புவியியல் ரீதியான வரலாற்றை கண்டறிய இயலும். இந்த சிகரத்தின் மண்ணை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள இருக்கின்றனர். கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் கியூரியாசிட்டி இப்புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்திருக்கிறது.