PAGEVIEWERS


செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி


 Mars Rover Sends Back Human Voice Recording
NASAs Mars rover sends back stunnin...
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.
"க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது," என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.
இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது க்யூரியாசிட்டி.
க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப்பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
அடுத்த சில தினங்களில் க்யூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment