வேலூரில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் வெங்கடேசன்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான ஓசூரில் உள்ள அவரது வீட்டிலும், மாமனார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதேபோல் ராணிப்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவராக இருப்பவர் பூங்கோதை. இவர் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகம் காட்டுவதற்கு மோசடி செய்வதற்கு உதவி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தனியார் பள்ளிகளில் விசாரணை நடத்தினர். அவரையும் மாவட்ட தொடக்க கல்வி அலுவர் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment