PAGEVIEWERS


புதிய ரூ.1000 நோட்டு விரைவில் வெளியீடு


இந்திய ரூபாய்க்கு தனி சின்னம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் அந்த சின்னம் அச்சிடப்படுகிறது. ஏற்கனவே 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் சின்னத்துடன் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியாக உள்ளது. இது பற்றி, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: ரூபாய் சின்னம் அச்சடிக்கப்பட்ட புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும்.

மகாத்மாகாந்தி,2005 வரிசையில் ‘எல்’ வரிசையாக இந்த நோட்டு வெளியாகிறது. நோட்டின் முன்பக்கம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்து இருக்கும். பின்புறம் 2012 என ஆண்டு குறிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டு மேலும் சில பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment