PAGEVIEWERS


 : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் பகுதியைச்சேர்ந்தவர் ராஜா. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் (14). திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார். சக மாணவர்கள் சிலரை கார்த்திகேயன் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த ஆசிரியர் பிரபு, கார்த்திகேயனை பிரம்பால் அடித்தார். 

இதனை தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து தந்தை ராஜா திண்டுக்கல் தாலுகா போலீசில் அளித்த புகார்  பேரில் ஆசிரியர் பிரபுவை கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் (பொ) லதா வீட்டில் ஆசிரியர் பிரபுவை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

No comments:

Post a Comment