: பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சமீபத்தில் நடந்தது. இதில் பி.எட்., பிரிவில் சமூக அறிவியலில் 150 க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அருள்வாணி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன். தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்றாகும். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு அவசியமானது. அப்போது தான் சிறந்த ஆசிரியர்களை, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும், என்றார்.
No comments:
Post a Comment