எல்லாருக்கும் நன்மை செய்யுங்க!
* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே! சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
* வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment