PAGEVIEWERS


ஓடும் ரயிலில் இருந்து ஆசிரியரை தூக்கி வீசி கொலை செய்த பயணிகள்

 Teacher Thrown Off Train Uttar Pradesh Dies
Dejected Qantas passengers stuck at...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி ஆசிரியர் ஒருவரை சக பயணிகளே கொலை செய்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மொராபாத்துக்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கங்கா ஷரன் என்ற பள்ளி ஆசிரியர் பயணம் செய்தார்.
பயணத்தின்போது அவருக்கும் சில பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.
அப்போது ரயில் லக்னெளவில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
திடீரென பயணிகள் ஆசிரியர் கங்கா ஷரனை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

தண்டவாளம் அருகில் விழுந்த அவர் அதே இடத்தில் பலியானார். அவரைத் தள்ளிவிட்ட பயணிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லஞ்சம் தராத பயணியை தள்ளிவிட்ட ரயில்வே போலீசார்:
இந் நிலையில் மும்பையில் லஞ்சம் கேட்ட ரயில்வே போலீசாருக்கு பணம் தராத பயணியை போலீசாரே ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மும்பை குர்லா பகுதியை சேர்ந்த ஹபீபுல்லா என்பவர் ஆட்டுக் கறியை ரயிலில் கொண்டு சென்று வடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் இவர் குர்லாவில் இருந்து திலக் நகருக்கு ரயிலில் சென்றார்.
அப்போது ரயிலில் வந்த 4 போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டனர்.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவு திரும்பிய அவர் 4 போலீசார் மீதும் புகார் தந்தார். இதையடுத்து போலீசார் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment