மதுரை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2012 - 13க்கான
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலையில் பயிலும்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி வீரர்களுக்கு ரூ.10ஆயிரம், கல்லூரி, பல்கலை வீரர்களுக்கு
ரூ.13ஆயிரம் வழங்கப்படும். 1.7.2011 முதல் 30.6.12 வரையான காலத்தில்,
விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மட்டும்
விண்ணப்பிக்கலாம். தேசிய பள்ளி விளையாட்டு குழுமம்,
அங்கீகரிக்கப்பட்ட
தேசிய விளையாட்டு கழகம், இந்தியப் பல்கலை நடத்தும் போட்டிகளில் வெற்றி
பெற்றிருக்க வேண்டும்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.10 செலுத்தி, விண்ணப்பம் பெறலாம்.
ஆக.,31க்குள் பூர்த்தி செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைக்க
வேண்டும்.
No comments:
Post a Comment