பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
: வழிவகைகள் ஆராயப்படும்:
பிரதமர்
அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டுவது குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னணியில், இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தேன். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி இனத்தவரின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக, அரசியல்சாசனத் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு தயங்கியதில்லை. உதாரணமாக, இந்திரா சஹானி வழக்கில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பது சட்டத்தை மீறியது என்று உச்ச நீதிமன்றம் 1992-ம் ஆண்டு நவம்பர் 16-ல் தீர்ப்பளித்தது. எனினும், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அந்த இடஒதுக்கீட்டை அனுமதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த ஒதுக்கீடு தொடர்வதற்காக, 77-வது அரசியல் சாசனத் திருத்தத்தை 1995-ம் ஆண்டில் அரசு கொண்டுவந்தது. இதன்மூலம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு ஐந்து ஆண்டுகளுக்கு காலாவதியாகாமல் நீடிக்க வழிவகுக்கப்பட்டது.
எனவே, தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த நிலைமைக்கு தீர்வு காண அனைத்து வழிவகைகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. இவ்விவகாரத்தில் அரசு முடிவெடுப்பதற்கு உதவியாக, சட்டரீதியான தீர்வைக் காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
சட்டத்திருத்த மசோதா
ஒத்திவைப்பு: அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகுக்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதாவை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவர அரசு முதலில் உத்தேசித்திருந்தது. எனினும், இந்த ஒதுக்கீட்டுக்காக புதிய சட்டத்தையே கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா கொண்டு வருவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க., இந்த விஷயத்தில் அரசு அவசரம் காட்டக் கூடாது என்றும் இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்க
No comments:
Post a Comment