தமிழகத்தில்
உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்ட
தலைமை அரசு மருத்துவமனைகளில், பெண்களுக்கான
இரண்டாண்டு செவிலியர் பட்டயப்
படிப்பிற்கு, 2,000 இடங்கள் வரை உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர்
சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னை,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது, "கட்-ஆப்' மதிப்பெண், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட
விவரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment